இன்று நான்காவது டி20: தொடரை வெல்லுமா இந்திய அணி?

விளையாட்டு

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில்லில் இன்று (ஆகஸ்ட் 6) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.இந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20  போட்டி தொடரில் மோதி வருகின்றன. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இதனால் டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில்லில் நடக்கிறது. நான்காவது போட்டி இன்று (ஆகஸ்ட் 6) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதே நிலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இருக்கிறது.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அஸ்வின் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவும் இந்தத் தொடரில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், மேயர்ஸ், போவெல், ஹெட்மர், ஹோல்டர், ஜோச், மெக்காய் உள்ளனர். அந்த அணி வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டும் என்பதால் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் டி20 தொடரைக் கைப்பற்றும்.

-ராஜ்

செஸ் ஒலிம்பியாட்: நாராயணன் வெற்றி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *