இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 20) நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இரண்டு முக்கியமான வரலாற்று சம்பவங்கள் இடம் பெறுகிறது.
அதன்படி, இந்திய வீரர் விராட் கோலி விளையாடும் 500-வது சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றொன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணி மோதும் 100 வது டெஸ்ட் போட்டியாகவும் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் இண்டீஸ் மற்றும் இந்திய அணி நேரடியாக மோதியுள்ளது. அதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 முறையும், இந்திய அணி 23 முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
46 போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கிறது. இதில் கடைசியாக 21 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருமுறை கூட இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தியானத்தில் ஆழ்ந்த சமந்தா: வைரல் போட்டோ!
அதிகரிக்கும் வெப்ப அலை: எச்சரிக்கும் ஐ.நா – காரணம் என்ன?
India 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🔥🌋🌋🌋🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳