22 ஓவரில் சுருண்டது இலங்கை… வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

விளையாட்டு

கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி வைட்வாஷ் செய்துள்ளது.

இந்தியா – இலங்கை எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டி மற்றும் அதற்கு அடுத்த நடைபெற்ற 2வது போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே திருவனந்தபுரம் க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜனவரி 15) நடைபெற்றது. தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றியுடன் திரும்ப வேண்டும் நம்பிக்கையோடு இலங்கை அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை திணறவிட்டனர்.

 odi india won the series

சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து இலங்கை அணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இதனால் 50 ஓவர் இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது.

இதனால் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

எனினும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 22வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் இந்தியா கடைசி ஒரு நாள் போட்டியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் 3-0 என்ற கணக்கில இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வைட் வாஷ் செய்துள்ளது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ (19), கசுன் ராஜித (13), தசுன் ஷனகா (11) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர்.

odi india won the series

இந்திய அணியில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். முகமது ஷமி மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

மேலும் ஒரு நாள் போட்டிகளின் “ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது” என இரண்டையும் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார்.

ஏற்கெனவே தொடரை கைபற்றிய போதிலும், இன்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்திய அணி அலட்சியமாக இல்லாமல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அபாரமாக விளையாடியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்கி காருடன் சென்ற விஜய்

ரசிகர் மன்றங்கள் ஆராதனைகளை நிறுத்துமா?

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *