இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2-0என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்தியா.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது.
இதில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி 2-1என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய ஒரு நாள் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.
முதல் போட்டியில் 67ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி இன்று(ஜனவரி 12) இலங்கையுடன் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 39.4ஓவரில் 215ரன்களில் அனைத்து விக்கெட்டுகளில் இழந்தது இலங்கை.
எனவே 216 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விளையாடிய இந்திய அணி 43.2ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 219ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியில், கே.எல். ராகுல் 64 ரன்களும், ஹர்திக் பாண்டியா 36 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களும், அக்சர் படேல் மற்றும் சுப்மன் கில் இருவரும் தலா 21 ரன்களும், ரோகித் ஷர்மா 17 ரன்களும், குல்திப் யாதவ் 10 ரன்களும், விராட் கோலி 4 ரன்களும் எடுத்துள்ளனர்.

இலங்கை அணியின், சாமிக்க கருணாரத்ன மற்றும் லஹிரு குமார தலா 2 விக்கெட்டுகளும், தனஞ்சய டி சில்வா மற்றும் கசுன் ராஜித தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மோனிஷா
பத்திரிக்கையாளர் துரைபாரதி மறைவு: இதழியல் துறைக்கு இழப்பு – முதல்வர்