இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடர் முதல் போட்டி இன்று (செப்டம்பர் 28) மாலை திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டி20 தொடரில் மூன்று போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகள் மோதும் டி20 தொடர் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கீரின் பீல்டு சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.
இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனைத் தொடர்ந்து, டி20 உலக கோப்பைக்கு முன்பு கடைசி போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடவுள்ளதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்
டி20 அணியிலிருந்து தீபக் ஹூடா, முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக சபாஷ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல் அல்லது அஸ்வின், யுவேந்திரசாஹல், பும்ரா, அர்ஷ் தீப்சிங், ஹெர்ஷல் பட்டேல், அல்லது தீபக் சாஹர் விளையாட உள்ளனர்.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கவுள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார்.
ஆறாவது பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவர், வேகபந்து வீச்சாளர்களாக பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்க அணி வீரர்கள்
குயுன் டான்டிகாக் பவுமா தலைமையில் மார்க்ராம், ரிலீ ரோசவ் அல்லது ரீஜா ஜென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பிரிட்டொரியஸ் அல்லது பெலுக்வாயோ, ஷம்சி, ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
மோனிஷா
உதநிதி படத்துக்கு அவசரம் காட்டும் கமல்
இந்தியாவில் சம்ஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை?: அதிர்ச்சி தகவல்!