இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சோபிக்கத் தவறியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருப்பதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் விளையாடி வருகிறது.
லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் இருந்தன.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று(அக்டோபர்11)டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் அறிமுகம் ஆகியுள்ளார். தெ.ஆ. அணியில் பவுமா, மஹாராஜ், ரபாடா ஆகியோர் இடம்பெறவில்லை.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியினர், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியில் க்ளாசென் மட்டும் 34ரன்கள் எடுத்தார். அடுத்த துவக்க பேட்டரான மலன்15 ரன்களும், ஜான்சன்14 ரன்களும் எடுத்தனர்.
மற்றவர்கள் ஒற்றை ரன்களிலேயே நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி, 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷஹ்பஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
‘விக்ரம் வேதா’ ஸ்டைலில் இஷான் கிஷானை வாழ்த்திய சுப்மான் கில்
டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் யார் யார்? கிரிஸ் கெயில் கணிப்பு!