2025 சாம்பியன்ஸ் ட்ரோபி : இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?

Published On:

| By christopher

India Vs Pakistan Champions Trophy 2025

2024 டி20 உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், தற்போது ஐசிசி அடுத்து நடத்தும் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் அனைவரிடமும் கவனம் பெற்றுள்ளது.

அடுத்த சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் 2025-இல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி பெற்றுள்ளது.

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் புள்ளிப்பட்டியல் அடிப்படையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியுடன், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகள் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடருக்கான வரைவு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் அடுத்த பிப்ரவரி 19 துவங்கி மார்ச் 9 அன்று நிறைவு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மார்ச் 10-ஐ இறுதிப்போட்டிக்கான ‘ரிசர்வ் டே’-வாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடர், பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் பி: ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து

முதலாவதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மீதமுள்ள 3 அணிகளுடன் மோதும். இதன் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்துள்ள அணிகள் இடையே அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும்.

தற்போது வெளியாகியுள்ள வரைவு அட்டவணையில், இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்தை மார்ச் 1 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானுக்கு சென்று 2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய அணி விளையாட, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி கடைசியாக 2006-ஆம் ஆண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றம் போக்க என்ன வழி?

டாப் 10 நியூஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீது தீர்ப்பு முதல் இந்திய அணி வீரர்கள் பேரணி வரை!

கிச்சன் கீர்த்தனா : இறால் தொக்கு தோசை

டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share