இந்தியா Vs நியூசிலாந்து ஃபைனல்… கடற்கரையில் கண்டுகளிக்கலாம்!

Published On:

| By Selvam

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டி, சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (மார்ச் 9) நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Final live telecast Marina

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி 9-ஆவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் அனைத்து ஆட்டங்களும் பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, துபாயில் நடைபெற்றது.

லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்குள் இந்திய அணி நுழைந்தது. மார்ச் 4-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான அரையிறுதி போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அதேபோல, மார்ச் 5-ஆம் தேதி தென் ஆப்பிரிவுக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தநிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி, இன்று மதியம் 2.30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.19.5 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ.9.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே மார்ச் 2-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இறுதிப்போட்டியை சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் அகன்ற திரையில் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, விவேகானந்தா நினைவு இல்லத்திற்கு எதிர்புறத்தில் மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள போலீஸ் பூத் அருகிலும் இறுதிப்போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். பிப்ரவரி 23-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியும் கடற்கரையில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. Final live telecast Marina

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share