நியூசிலாந்தை வென்ற இந்தியா- 4 விக்கெட் வீழ்த்திய ஹூடா

T20 விளையாட்டு

நியூசிலாந்திற்கு எதிரான டி20 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று டி20 தொடரின் 2வது போட்டி இன்று (நவம்பர் 20) நடைபெற்றது.

முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. குறிப்பாக சூர்ய குமார் யாதவ் சதம் அடித்து 51 பந்துகளில் 11 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது.

india vs newzealand t20 india won the match by 65 runs

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 61 ரன்களும் டெவோன் கான்வே 25 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் தீபக் ஹூடா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாகல் மற்றும் சீராஜ் தலா 2 விக்கெட்டுகளும் புவனேஷ்குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 தொடர் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மோனிஷா

மங்களூர் குண்டு வெடிப்பு: உதகை நபரிடம் விசாரணை!

டி20: சதம் அடித்த சூர்யகுமார்- நியூசிலாந்து எடுத்த ஹாட்ரிக்: வெல்வது யார்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *