முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 27) ராஞ்சியில் உள்ள ஜெ.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியில், டேரில் மிட்செல் 59 ரன்களும், கான்வே 52 ரன்களும், ஃபின் ஆலன் 35 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 17 ரன்களும், சான்ட்னர் 7 ரன்களும், எம் பிரேஸ்வெல் 1 ரன்னும் எடுத்திருந்தனர்.
நியூசிலாந்து அணி 20 ஓவர் இறுதியில், 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், குல்திப் யாதவ் மற்றும் சிவம் மாவி மூவரும் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
மோனிஷா
வங்கி ஊழியர்கள் 2 நாள் போராட்டம் ஒத்திவைப்பு!
பிறந்தநாளன்று டிக்டாக் பிரபலம் தற்கொலை!