2வது ஒருநாள் போட்டியில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது நியூசிலாந்து அணி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ந்து டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.
தொடர்ந்து இன்று (ஜனவரி 21) 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணியில், அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 36 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 27 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 22 ரன்களும் எடுத்திருந்தனர்.
மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் 50 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 2வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியா வசமாகிவிடும்.
மோனிஷா
3 மாநிலத் தேர்தல்: வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தீவிரம்!
பன்னீரை முந்திக்கொண்டு பாஜகவிடம் சென்ற ஈபிஎஸ்