3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.
ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்திலும், ஜனவரி 21 அன்று நடைபெற்ற 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி நியூசிலாந்தை வெற்றி பெற்று தொடரை கைபற்றியது.
தொடர்ந்து இன்று (ஜனவரி 24) இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வென்று நியூசிலாந்தை முற்றிலுமாக ஒயிட்வாஷ் செய்திட வேண்டும் என்று இந்தியாவும், ஆறுதல் வெற்றியாவது பெற்றிட வேண்டும் என்ற முயற்சியோடு நியூசிலாந்து அணியும் களமிறங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டால் லதாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோகித் மற்றும் கில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது மட்டுமில்லாமல், அடுத்தடுத்த சதம் அடித்து சாதனை படைத்தனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை ரோகித் ஷர்மா – சுப்மன் கில் ஜோடி பெற்றது.
தொடர்ந்து இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணி 50 ஓவர் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.
இதனால் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஒரு ரன்களை கூட எடுக்காமல் அணிக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டெவோன் கான்வே சதம் அடித்து 138 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணியின் மற்ற வீரர்கள் சுமாரான ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய பவுலர்கள் அதிரடியாகப் பந்துவீசியதால் 295 ரன்கள் எடுத்திருந்த 41.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் ஒயிட் வாஷ் ஆனது நியூசிலாந்து.
இதனால் இந்திய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி பெற்றது. இந்திய அணியில், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்திப் யாதவ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்று நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியை வென்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
மோனிஷா
”வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” – பன்னீர் பேட்டி
டிஜிட்டல் திண்ணை: பாஜக இல்லாமலே இரட்டை இலை- எடப்பாடி சொன்ன சீக்ரெட்!