நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் 2வது போட்டியில் இந்திய அணி 191 ரன்களை குவித்தது.
இந்தியா அணி நியூசிலாந்திற்கு சுற்றுலா மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
கடந்த 18 ஆம் தேதி டி20 தொடர் முதல் போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து இன்று (நவம்பர் 20) 2வது போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர். ரிஷப் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் சிறப்பான தொடக்கத்தை அளித்த தொடக்க வீரரான இஷான் கிஷான் 36 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஷ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடி வந்த சூர்யகுமார் அசத்தலான பேட்டிங் மூலம் 49 பந்துகளில் சதம் அடித்து அதிரடி காட்டினார். 51 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ஹர்திக் 13 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது.
கடைசி ஓவரில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் சவுத்தி ஹாட்ரிக் விக்கெட்’ வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மோனிஷா
உலக கோப்பை போட்டி: எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்?
மழையுடன் சூறாவளி காற்று : வானிலை அப்டேட்!