இன்று (நவம்பர் 25) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாட நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
சுப்மன் கில் 65 பந்துகளில் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஸ்ரேயர்ஸ் ஐயர் 80 ரன்கள் எடுத்திருந்தார்.

சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
ரிஷப் பண்ட் 15ரன்களும் சாம்சன் 36 ரன்களும் ஷர்துல் தாக்கூர் 1 ரன்னும் வாஷிங்டன் சுந்தர் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
50ஓவர் இறுதியில் இந்திய அணி 7விக்கெட் இழப்பிற்கு 306ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
நியூசிலாந்து அணியில் ஃபின் அலென் 22ரன்களும் டேவன் கான்வே 24ரன்களும் டேரில் மிட்செல் 94ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தனர். நியூசிலாந்து அணி 47.1 ஓவரிலேயே இலக்கை அடைந்து 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களில் சதத்தை நழுவ, டாம் லதாம் அதிரடியாக சதம் கண்டு 145 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டியதோடு அணியை வெற்றி பெறசெய்தார்.
இதனால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
மோனிஷா
ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு: முன்னாள் டிஜிபி ஆஜர்!
மெஸ்ஸியின் சாதனை… தகர்த்தெறிந்த ரொனால்டோ