இன்று (நவம்பர் 20) இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 90சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியுடன் மோதிய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று 20ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ரோகித் ஷர்மா, விராட் கோலி, அஷ்வின் போன்ற சீனியர் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஷ்ரேயஸ், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டியில் களம் இறங்குகின்றனர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 18-ஆம் தேதி வெலிங்டனில் துவங்கிய முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது மழையால் தடைப்பட்டது.
இந்தநிலையில், இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மவன்ட் மவுங்கானாவில் நடைபெறுகிறது.

முதல் போட்டியைப் போன்று இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியும் மழையால் தடைபட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் உள்ள அக்குவெதர் வானிலை அறிவிப்பின்படி, “மவன்ட் மவுங்கானாவில் 90 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
84சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும். மணிக்கு 52கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேக மூட்டம் 84 சதவிகிதம் இருக்கும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை குறைவதற்கான 42சதவிகிதம் வாய்ப்புள்ளது. வெலிங்கடன் போல் இல்லாமல் முதல் இன்னிங்ஸ் நடக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்ப்பது ஆபத்தானதா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!