இன்று (அக்டோபர் 27) இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டியில், 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சிட்னி வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய முதலாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இன்று நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
வங்க தேசத்திற்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நூலிலையில் வெற்றி வாய்ப்பை நெதர்லாந்து அணி தவற விட்டது. 9 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வங்கதேச அணி வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற கிரிக்கெட் மைதானங்களை விட சிட்னி கிரிக்கெட் மைதானம் சற்று மாறுபட்டது. வேகப்பந்து வீச்சுக்கு இந்த மைதானம் ஈடுகொடுக்காது. அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சுக்கு இந்த ஆடுகளம் நன்றாக ஈடு கொடுக்கும்.

பேட்டிங்கை பொறுத்தவரை நார்மலாக பந்தை விரட்டுவதற்கு தகுந்த ஆடுகளம். இந்த மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன.
சிட்னியில் வானிலையானது பகலில் 25 டிகிரி செல்சியசாகவும், இரவில் 14 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். இதனால் இந்தியா, நெதர்லாந்து ஆட்டம் நடைபெறும் போது 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு வேளை இந்திய அணி டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடலாம். முதல் பேட்டிங்கிற்கு பிறகு இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறையில் வெல்ல வாய்ப்புள்ளது.
செல்வம்