India vs Nepal Asia Cup 2023

ஆசிய கோப்பை: இந்தியா – நேபாளம் மோதல்!

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) இந்திய அணியுடன், நேபாள அணி மோதவுள்ளது. பல்லகெலே நகரில் இன்று மழைப்பொழிவு இருக்கும் என்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் இதே மைதானத்தில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று இந்தியா-நேபாளம் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

India vs Nepal Live Streaming, Asia Cup 2023: When and where to watch the match live for free? | Cricket News - The Indian Express

இதனிடையே பல்லகெலேவில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: லீன் அன்ட் லைட் சாலட்  

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *