அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
அதன்படி இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 18) தொடங்குகிறது.
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக ஓய்வில் இருந்த பும்ராவுக்கு இந்த தொடர் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குதிரும்பும் அவரது பந்து வீச்சு எப்படி உள்ளது? முழு உடல்தகுதியுடன் இருக்கிறாரா என்பதை பரிசோதிக்கும் தொடராக இது அமையும்.
விரைவில் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டி வர உள்ள நிலையில் தன்னுடையை திறமையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பும்ரா
அதேபோல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசிய ரிங்கு சிங், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா அறிமுக வீரர்களாக களம் காண உள்ளனர்.
ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகிய இளம் வீரர்கள் தங்களது பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற இந்த தொடர் முக்கியமானதாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்
இந்தியா அணி
ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் , ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்
அயர்லாந்து அணி
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆன்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் ஹேம்ப்பெர், பியான் ஹேன்ட், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, ஜோஷ் லிட்டில், பென் ஒயிட்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக பார்க்கலாம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: பின்னணி இது தான்!
ராமநாதபுரத்தில் மோடியா? குதிரை வண்டிக் காரர் வரலாற்றை நினைவுபடுத்திய கனிமொழி