இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.
டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
வங்கதேச அணியில், மெஹிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து அதிரடி காட்டியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மஹ்முதுல்லா 77 ரன்களும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்களும், நாசூம் அகமது 18 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 12 ரன்களும், அனாமுல் ஹக் 11 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 8 ரன்களும், லிட்டன் தாஸ் 7 ரன்களும் எடுத்திருந்தனர்.
50 ஓவர் இறுதியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், உம்ரன் மாலிக் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
தொடர்ந்து இந்திய அணி 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
மோனிஷா