வங்காளதேச பந்துவீச்சில் திணறிய இந்திய அணி!

விளையாட்டு

இந்தியா – வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று (டிசம்பர் 4) நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 4) நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணிக்கு இடையேயான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் தற்போது வங்காளதேச அணியுடனான தொடரில் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் ரோகித் ஷர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து ஷிகர் தவான் 7 ரன்களும், விராட் கோலி 9 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 2 ரன்களும், சிராஜ் 9 ரன்களும், குல்தீப் சென் 2 ரன்களும் எடுத்திருந்தனர்.

இப்படி இந்திய அணியின் நம்பிக்கை வீரர்கள் அனைவரும் குறைவான ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் கே.எல். ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து 73 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால் இந்திய அணி, வங்காளதேச அணி வீரர்களின் அசத்தலான பந்துவீச்சில் 41. 2 ஓவரில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாகிப் 5 விக்கெட்டுகளையும் ஹோசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியைத் திணறடித்தனர்.

தொடர்ந்து வங்கதேச அணி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

மோனிஷா

ஜெ நினைவு தினம்: இன்றே திதி கொடுத்த முன்னாள் அமைச்சர், எம். பி.!

குஜராத் மக்களுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *