வங்கதேசத்திடம் சுருண்ட இந்தியா

விளையாட்டு

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று (டிசம்பர் 4) நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில் நேற்று விளையாடியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் குறைவான ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 41.2 ஓவரில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. இந்த அணியில், லிட்டன் தாஸ் 41 ரன்களும், அனாமுல் ஹக் 14 ரன்களும், ஷாகிப் அல் ஹசான் 29 ரன்களும் அடித்து பொறுமையாக விளையாடி வந்ததனர்.

136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, தோல்வியின் விளிம்பில் இருந்தது. அப்போது மெகஹந்தி ஹசன், முஸ்தாபிசூர் கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில், வங்கதேச அணி 46 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சிராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மோனிஷா

இரட்டை சகோதரிகளுடன் திருமணம்: மாப்பிள்ளை மீது பாய்ந்த வழக்கு!

காதல், திருமண உறவு வழக்கு : டிஜிபி புது உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.