வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் போது ரோகித் ஷர்மா விற்கு காயம் காரணமாக விலகியதால் இந்திய அணி கே. எல். ராகுல் தலைமையில் களமிறங்கியது.
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 வது போட்டியின் போது டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று (டிசம்பர் 24) வங்கதேச அணி 70. 2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாகீர் ஹாஸன் 50 ரன்களும், லிட்டன் தாஸ் 73 ரன்களும் எடுத்திருந்தனர்.
அதிகபட்சமாக இந்திய அணியின் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரரான புஜாரா 6 ரன்களும், விராட் கோலி 1 ரன்னும் என வந்த வேகத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
கே. எல். ராகுலும் வெறும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனால் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி க்கு 100 ரன்கள் தேவை என்ற இலக்கோடு இன்றைய ஆட்டம் தொடங்கியது.
களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் (29*), தமிழக வீரர் அஸ்வின் (42*) ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 47 வது ஓவரில் இந்திய அணி 145 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இதன் மூலம் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது.
மோனிஷா
வங்கதேச வீரர்கள் ரொம்பவே ப்ரெஷர் கொடுத்தார்கள்: அஸ்வின்
1.5 டன் தக்காளியில் கிறிஸ்துமஸ் தாத்தா !