IND vs AUS: தொடரை கைப்பற்றிய இந்தியா

விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி, பெங்களுருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக விளையாடிய 4 போட்டிகளில், 3-ல் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே 3-1 என தொடரை தன்வசமாக்கியிருந்தது.

இந்த நிலையில், கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மருத்துவ அவசரம் காரணமாக, தீபக் சஹர் அணியில் இருந்து விலகி வீடு திரும்பிய நிலையில், அவருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல, கிறிஸ் க்ரீனுக்கு பதில் நாதன் எல்லிஸ் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சியளித்தது. யசஸ்வி ஜெய்ஸ்வால் (21 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாத் (10 ரன்கள்), கேப்டன் சூரியகுமார் யாதவ் (5 ரன்கள்), ரிங்கு சிங் (6 ரன்கள்) என இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

ஆனால், ஷ்ரேயஸ் அய்யர் (53 ரன்கள்), ஜிதேஷ் சர்மா (24 ரன்கள்) மற்றும் அக்சர் பட்டேல் (31 ரன்கள்) ஆகியோர் அதிரடியால், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் சேர்த்தது.

161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு, ஜோஷ் பிலிப் (4 ரன்கள்) மோசமான துவக்கம் அளித்தலும், டிராவிஸ் ஹெட் (28 ரன்கள்), பென் மெக்டெர்மோட் (54 ரன்கள்) அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

ஆனால், இவர்கள் ஆட்டமிழந்தபிறகு களமிறங்கிய டிம் டேவிட் (17 ரன்கள்), மேத்யூ ஷார்ட் (116 ரன்கள்), கேப்டன் மேத்யூ வேட் (22 ரன்கள்) ஆகிய முக்கிய வீரர்கள் பெரிய ஸ்கோர் சேர்க்காமல் வெளியேற, 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 154 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம், இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவுக்காக முகேஷ் குமார் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

பேட்டிங்கில் 21 பந்துகளில் 31 ரன்கள் விளாசி, பந்துவீச்சில் 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய அக்சர் பட்டேல், இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

மேலும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் 9 விக்கெட்களுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டி20 தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில், ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை சமன் செய்த ரவி பிஸ்னாய், இந்த தொடருக்கான ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார்.

அதேபோல, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு, ஒரு அபார சதத்துடன் 5 இன்னிங்ஸ்களில் 223 ரன்கள் குவித்த ருதுராஜ் கெய்க்வாத், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் 218 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தை மாதம் நெருங்குது… தங்கம் விலை எகிறுது!

எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட உக்ரைன் முன்னாள் அதிபர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *