india vs australia t20

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா

விளையாட்டு

ஒருநாள் உலகக்கோப்பை தொடரை அடுத்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் மேக்ஸ்வெல் மேஜிக்கால் ஆஸ்திரேலியா வெற்றியை தன்வசமாக்கியது.

இந்நிலையில், ராய்ப்பூரில் நடைபெற்ற டி20 தொடரின் 4வது போட்டியில், ஆஸ்திரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்சவால் (37 ரன்கள்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (32 ரன்கள்) சிறப்பான துவக்கம் அளித்தனர்.

அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஏமாற்றம் அளித்தாலும், ரிங்கு சிங் (46 ரன்கள்) மற்றும் ஜிதேஷ் சர்மா (35 ரன்கள்) அதிரடியால், இந்தியா 20 ஓவர் முடிவில் 174 ரன்களை சேர்த்தது.

175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா, அக்சர் பட்டேல் சூழலில் சிக்கி தடுமாற, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 154 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகப்படியாக, கேப்டன் மேத்யூ வேட் 36 ரன்களும், டிராவிஸ் ஹெட் 31 ரன்களும் சேர்த்தனர்.

இந்த போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 213 போட்டிகளில் 136ல் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், இதுவரை விளையாடிய 226 போட்டிகளில், 135 ஆட்டங்களை வென்றுள்ளது. 200 போட்டிகளில் விளையாடி, அதில் 102 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

தலா 95 வெற்றிகளை பெற்று, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளது. 6வது இடத்தில் இங்கிலாந்து (92 வெற்றிகள்), 7வது இடத்தில் இலங்கை (79 வெற்றிகள்), 8வது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் (76 வெற்றிகள்), 9வது இடத்தில் ஆப்கானிஸ்தான் (74 வெற்றிகள்) மற்றும் 10வது இடத்தில் அயர்லாந்து (64 வெற்றிகள்) ஆகிய அணிகள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

அமலாக்கத்துறை அதிகாரி கைது: அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்!

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்…கோப்பையை தட்டி தூக்குமா தமிழ் தலைவாஸ்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *