டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா!

T20 விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தொடருக்கான 3வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று (அக்டோபர் 17) நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று (அக்டோபர் 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கான ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 10 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று அங்குப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்திய அணி 4 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது பயிற்சி ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றிருந்தன. இந்திய அணி, இவ்விரு பயிற்சி ஆட்டங்களையும் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தது.

அதன்படி இன்று 3வது பயிற்சி ஆட்டத்தை, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடவுள்ளது.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் இந்திய வீரர்கள் சூப்பர் 12 சுற்றில் விளையாடுவதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவுள்ளனர்.

இதே போல் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இது பயிற்சி மோதல் என்றாலும் கூட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமின்றி, இன்று நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளன.

மோனிஷா

சட்டபேரவை இருக்கை: பன்னீருக்கு அதே இடம்!

சிலிண்டர் வெடிப்பு : 7 பேர் படுகாயம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *