ஜடேஜா, அஷ்வின் அதிரடி: 113 ரன்களில் அவுட்டான ஆஸ்திரேலியா

Published On:

| By Monisha

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2வது போட்டியின் 3வது நாளில் 113 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 262 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து இன்று (பிப்ரவரி 19) 3வது நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறியது.

இதனால் 31.1 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 3 விக்கெட்டையும் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கினர்.

ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கே.எல். ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 31 ரன்களில் ரன் ஆவுட்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வரும் நிலையில், விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஸ்ரேயர்ஸ் ஐயர் புஜாராவுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

2வது இன்னிங்ஸில் 20 ஓவர் பந்து வீசப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

மோனிஷா

“எனக்கு அண்ணன் மாதிரி”: மயில்சாமி குறித்து உதயநிதி உருக்கம்!

தொகுதி மாறும் தொல்.திருமா… குறிவைக்கும் துரை.வைகோ- என்ன செய்யும் திமுக? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel