இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்!

விளையாட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதியாகி உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று (மார்ச் 17) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 75 ரன்கள், ஜடேஜா 45 ரன்கள் எடுத்திருந்தனர்.

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆந்திராவில் நாளை நடைபெற உள்ளது. மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது. சி, டி, இ கேலரிகளில் ஒரு டிக்கெட் ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக நேற்று இரவு முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: வரகு முறுக்கு வற்றல்

“ரஜினி சிறந்த நடிகர் இல்லை”: அமீர்

+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.