செஸ் ஒலிம்பியாட்: கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கும் இந்தியா!

Published On:

| By christopher

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி கறுப்பு நிற காய்களுடன் விளையாடுகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழாவை முன்னிட்டு நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதி வளாகத்தில் அமைக்‍கப்பட்டுள்ள 2 பிரம்மாண்ட அரங்குகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று முதல் 10ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ஒரு சுற்று என 11 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. தினமும் பிற்பகல் 3 மணிக்‍கு தொடங்கும் போட்டி, இரவு 9 மணி வரை நீடிக்‍கும். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓபன் பிரிவில் இரு பாலின வீரர்களும் விளயாடலாம்.

இன்று செஸ் ஒலிம்பியாட்டின் முதல் சுற்று ஆட்டம் தொடங்குகிறது. இதில் முதல்நிலை அணிகள் மோதும். தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய மகளிர் ஏ அணி முதல் சுற்றில் மோதுகிறது. மேலும் முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை, ஆட்ட காய்களின் நிறத்தையும் பிரதமர் மோடி தேர்வு செய்தார். அதன்படி இந்திய மகளிர் ஏ அணி, கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவர் அணியும் கறுப்பு நிற காய்களுடன் இன்று களம் இறங்கிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel