அறிமுக போட்டியிலேயே அமர்க்களம் செய்த தமிழக வீரர்… கேப்டனாக கே.எல்.ராகுல் படைத்த புதிய சாதனை!

விளையாட்டு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அர்ஷ்தீப், ஆவேஷின் அதிரடி பந்துவீச்சால் அந்த அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து சேஸிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே 5 ரன்களில் அவுட்டாகி ருத்துராஜ் அதிர்ச்சி அளித்தார். முல்தர் வீசிய 4-வது ஓவரின் 4-வது பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து ருத்துராஜ் வெளியேறினார்.

என்றாலும் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் (55) மற்றும் ஒன் டவுனில் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (52) இருவரும், அரை சதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

முடிவில் இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து  117 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதன் மூலம் பிங்க் ஜெர்ஸியில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய, முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை கே.எல்.ராகுலுக்கு கிடைத்துள்ளது.

கேப்டன் கே.எல்.ராகுலின் கையால் தொப்பி வாங்கி தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன், 43 பந்துகளில் 9 போர்களுடன் 55 ரன்களை அடித்து அசத்தினார்.

ஆரம்பம் முதல் போட்டி முடியும் வரை நிதானமாக ஆடிய சாய், தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்தார். அதோடு இன்றைய போட்டியில் துவக்க வீரராகவும் அவர் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *