பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றில் குருப் 2பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதி வருகின்றன.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டுகளை இழந்து 159ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் சோகம்!
இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
பெரிய போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் இந்த போட்டியிலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நஷீம் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ஹரிஸ் ராப் வேகத்தில் இப்திகாரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் (4) வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தானைப் போலவே இந்தியாவும் 5 ஓவரில் 22 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
போராடும் கோலி – பாண்டியா ஜோடி!
இதற்கிடையே அனுபவ வீரர் விராட் கோலி பொறுமையுடன் விளையாட, அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் (15) மற்றும் அக்சர் பட்டேல் (2) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்திய அணி மீது தற்போது நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் களத்தில் விராட்கோலியும், ஹர்திக் பாண்டியாவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் நிதானமாக ஆடிவருகின்றனர்.
எளிதாக வென்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அடுத்தடுத்த விக்கெட்டுகள் இழந்ததால் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
இன்றுடன் முடிவடையும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி ஆஃபர்!
மழைநீர் கால்வாயில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை!