திணறும் இந்தியா… சோகத்தில் ரசிகர்கள்… டஃப் கொடுக்கும் நியூசிலாந்து

Published On:

| By Selvam

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 2) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. India struggle against New zealand

இந்திய அணி தரப்பில், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் கலக்கிய சுப்மன் கில் வெறும் இரண்டு ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினார்.

அவரை தொடர்ந்து ரோகித் சர்மா ( 15 ரன்கள்), விராட் கோலி (11 ரன்கள்) சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயஸ், அக்சர் பட்டேல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர். அக்சர் பட்டேல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் 58 ரன்களுடனும், கேஎல் ராகுல் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 33 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு, இந்திய அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குறைந்தபட்சம் 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் நியூசிலாந்து அணிக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க முடியும். India struggle against New zealand

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share