தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு!

விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று (அக்டோபர் 2) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி வெளியிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் : ஷிகர் தவான் (கேப்டன் ), ஷ்ரேயாஸ் ஐயர் , ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ),

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் ), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் , அவேஷ் கான், முகமட். சிராஜ், தீபக் சாஹர்.

அக்டோபர் 6 ஆம் தேதி லக்னோவில் தொடங்கும் இந்தத் தொடர், ராஞ்சியில் அக்டோபர் 9 ஆம் தேதியும் டெல்லியில் அக்டோபர் 11 ஆம் தேதியும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டி20 உலகக் கோப்பை:அசத்தப் போகும் 5 வீரர்கள்!

கால்பந்து போட்டி கலவரம்: பலி எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு!

+1
2
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *