மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 டெஸ்ட் , மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் விளையட உள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ ஒரு அறிவிப்பை இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்0கொள்ள உள்ளதாக கூறியுள்ளது.
அதில், 3 ஒரு நாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்தியா – தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்
டி20 தொடர்
டிசம்பர் 10 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் டி20 – டர்பன்
டிசம்பர் 12 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது டி20 – குகெபர்ஹா
டிசம்பர் 14 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 3 ஆவது டி20 – ஜோகன்னஸ்பர்க்
ஒரு நாள் தொடர்
டிசம்பர் 17 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் ஒரு நாள் கிரிக்கெட் – ஜோகன்னஸ்பர்க்
டிசம்பர் 19 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் – குகெபர்ஹா
டிசம்பர் 21 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் – பார்ல்
டெஸ்ட் தொடர்
டிசம்பர் 26 – டிசம்பர் 30 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் டெஸ்ட், செஞ்சூரியன்
ஜனவரி 03 – ஜனவரி 07 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது டெஸ்ட், கேப்டவுன் நகரில் நடக்க உள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இரண்டு தங்கம்!
“பிரான்சில் திருவள்ளுவர் சிலை” – பிரதமர் மோடி உறுதி!