இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மூன்று போட்டிகளாக நடந்த டி20 தொடரில் இந்தியா தொடரைக் கைப்பற்றியிருக்கக்கூடிய நிலையில், நவம்பர் 25 ஆம் தேதியான இன்று முதல் ஒரு நாள் போட்டி நியூசிலாந்தில் இருக்கும் ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியிருக்கிறது.
50 ஓவர்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதால், இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆடினார்கள்.
கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைப் பெற்றிருக்கிறது.
இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.
முதல் மூன்று ஆட்டக்காரர்களுமே தங்களுடைய ஆட்டத்தை சிறப்பாய் தொடங்கிய காரணத்தால் மூவருமே அரைசதம் கடந்த வீரர்களாயினர்.
கேப்டன் ஷிகர் தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ஷுப்மான் கில் 65 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அதிரடி காட்டினர்.
இவர்கள் கூட்டணி ஆக்லாந்து மைதானத்தை தன்வசப்படுத்தியது.
அதன் பின்னர் ஷ்ரேயாஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கூட்டணியில் அவர்களும் அதிரடி காண்பிக்க ஆரம்பித்தனர்.
அதில் ஷ்ரேயாஸ் 4 சிக்ஸர் 4 பவுண்டரிகளாக 76 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து அட்டகாசமாய் ஆடி ரன்களை குவித்தார்.
வாஷிங்க்டன் சுந்தர் 3 பவுண்டரி 3 சிக்ஸர் என அடித்து நொறுக்கி 37 ரன்களை எடுத்தார்.
அடுத்ததாக ஆடிய ரிஷப் பந்த் , சூர்யகுமார் யாதவ் மற்றும் தாகூர் என அனைவரும் எதிர்பார்த்ததை விட சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.
உம்ரான் மாலிக் , அர்ஷ்தீப் மற்றும் சஹால் ஆடவேயில்லை .
ஆக ஆக்லாந்து மைதானத்தில் ஆடியவர்கள் 307 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி மற்றும் லாக்கி ஃபெர்கூஷன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்திருக்கின்றனர். ஆடம் மில்னே 1 விக்கெட்டை எடுத்திருக்கிறார்.
முதல் இன்னிங்சில் இந்திய அணியானது நியூசிலாந்துக்கு 307 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
பவித்ரா பாலசுப்ரமணியன்
மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம்: குழப்பத்தில் மக்கள்
“மனசாட்சிப்படி உண்மையை சொல்லுங்கள்”- சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி!