ISSF உலக சாம்பியன்ஷிப்: 2வது இடம்பிடித்த இந்தியா!

Published On:

| By christopher

india runner up in ISSF Junior World Championship

ISSF துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 17 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தென் கொரியாவின் சாங்வோனில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) உலக ஜூனியர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

தொடரின் இறுதிநாளான இன்று (ஜூலை 24) இந்தியா தனி நபர் மற்றும் குழு பிரிவில் விளையாடியது.

ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவிலும், அங்கைத் தோமர் மற்றும் சந்தீப் பிஷ்னோய் ஆகியோருடன் இணைந்து குழு போட்டியிலும் இந்தியா தங்கம் வெல்ல உதவினார்.

பெண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில், இந்தியாவின் தியானா சீனா வீராங்கனையிடம் (518) இருந்து மயிரிழையில் பின்தங்கி 519 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.

மேலும் பெண்களுக்கான 50 மீட்டர்‌ பிஸ்டல்‌ குழு போட்டியில்‌ டியானா, யாஷிதா ஷோக்கீன்‌, வீர்பால்‌ கவுர்‌ அகியோர்‌ அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

இதன்மூலம் 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 17 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

12 தங்கம் உட்பட 28 பதக்கங்களை வென்று சீனா சாம்பியன் பட்டத்தை தட்டிச் வென்றது.

கிறிஸ்டோபர் ஜெமா

’கலவரத்தில் மாநில அரசும் ஈடுபட்டது’: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ புகாரால் பரபரப்பு!

கொடநாடு வழக்கு : ஓபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் டிடிவி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share