உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : தகுதி பெற்ற இந்திய அணி!

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டமான 4வது- போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 480ரன்கள் விளாசியது. ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி 571ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 128 ரன்களும், விராட் கோலி 186ரன்களும் அடிக்க இந்தியா 91ரன்கள் முன்னிலை பெற்றது.

என்னதான் இரு அணிகளும் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4நாட்களை எடுத்துக்கொண்டனர்.

இதனால் 5-வது நாளில் தான் 2-வது இன்னிங்ஸை முடித்தாக வேண்டும். இதனிடையே, இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த போட்டியில் இந்தியா தோல்வி அல்லது டிராவை சந்தித்து, மற்றொருபக்கம் விளையாடி வரும் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-0 என தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், இலங்கையின் கனவை நியூசிலாந்து அணி முதல் போட்டியிலேயே தவிடு பொடியாக்கியுள்ளது.

திரில்லிங்காக சென்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது.

நியூசிலாந்து – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து, புள்ளிகள் அடிப்படையில் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

எனவே, இந்தியா-ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் போட்டி முடிவு இந்தியாவை பாதிக்கப்போவதில்லை. வரும் ஜூன் 7ஆம்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”யானைக்குட்டியை பிடித்து கொண்டு அழுதிருக்கிறேன்” நெகிழும் பெள்ளி

“நமக்கும் இயற்கைக்குமான புனிதப் பிணைப்பு”-ஆஸ்கர் தமிழ் குறும்பட இயக்குநர் கார்த்திகி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0