கடந்த செப்டம்பர் 23 அன்று சீனாவின் ஹாங்சோ நகரில் துவங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரின் 7வது நாளில், இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்று, தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர ஜோடியான ரோஹன் போபண்ணா – ருதுஜா போஸ்லே இணை, சீன தைபேவை சேர்ந்த சங்-ஹோ ஹாங் – என்சோ லியாங் இணையை எதிர்கொண்டது.
போபண்ணா – ருதுஜா இணை, தனது முதல் செட்டை 2-6 என மிக மோசமான நிலையில் இழந்தாலும், அடுத்த செட்டிலேயே மிக வலுவாக கம்-பேக் கொடுத்தது.
இறுதியில், 2-6, 6-3, 10-4 என சீன தைபே இணையை வீழ்த்திய ரோஹன் போபண்ணா – ருதுஜா போஸ்லே, இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கியுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து, ஆடவர் ஸ்குவாஷ் ஆட்டத்தின் குழு பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் சவுரவ் கோஷல், அபே சிங் மகேஷ் மங்கோன்கர் மற்றும் ஹரிந்தர் சந்து ஆகியோர் அடங்கிய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தது.
மேலும், துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில், இந்தியாவின் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா ஆகியோர் அடங்கிய அணி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான 10,000 மீ ஓட்டப்பந்தய போட்டியில், மாபெரும் சாதனையை இந்திய வீரர்கள் படைத்துள்ளனர்.
இந்த போட்டியில், கார்த்திக் குமார் வெள்ளி பதக்கத்தையும், குல்வீர் சிங் வெண்கல பதக்கத்தையும் வென்று வரலாறு படைத்துள்ளனர்.
இதன்மூலம், இந்திய அணி 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என 4வது இடத்தில் உள்ளது.
துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, 216 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 2வது இடத்திலும், ரிபப்ளிக் ஆஃப் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.
முரளி
டிஜிட்டல் திண்ணை: முஸ்லிம் ஓட்டு… எடப்பாடி எடுத்த திடீர் சர்வே!
அல்டிமேட் சவுண்ட் எபெக்டில் அட்டகாசமான எபிக்பூம் ஸ்பீக்கர்!
மாதக் கடைசியில் பாக்கெட் காலியா..? ; உங்களுக்கான டிப்ஸ்!