1.. 1.. 1.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

விளையாட்டு

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது.

இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்திய அணியானது 114 புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி மற்றும் 267 புள்ளிகளுடன் டி20 போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ போட்டிக்கான ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணி நம்பர் 1 இடத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதுதவிர, ஐசிசியின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவும், நம்பர் 1 ஒருநாள் பவுலராக முகமது சிராஜும், நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக ஜடேஜாவும் உள்ளனர்.

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி தொடர்ந்து தனது முழுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவதையே இது காட்டுவதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

டெல்லியில் பயங்கரம் : ‘லிவ் இன்’ காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்! கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.