டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி வாய்ப்பில் தடம்பதித்த இந்தியா

விளையாட்டு

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

இதன்காரணமாக உலக டெஸ்ட் போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு வந்திருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது ஜூன் மாதம் 2023 ல் லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் இறுதிப்போட்டியில் பங்கு பெற வேண்டுமானால் வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

அதன்படியே பங்காளதேஷ் உடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் போராடி வெற்றியை பெற்றுள்ளனர் இந்திய அணியினர்.

2022ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடியுள்ளது. இதில் 8 போட்டிகளில் வெற்றி, 4ல் தோல்வி மற்றும் 2ல் ட்ரா என்ற நிலையில் 58.93 சராசரியுடன் 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.

இன்னும் ஆஸ்திரேலியா உடனான முக்கியமான 4 டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் நிலையில், இந்த போட்டிகள் எல்லாம் முடிந்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணிகளுக்கான இறுதிப்போட்டி லண்டனில் இருக்கும் ஓவலில் நடைபெறும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை இந்தியா கைவிட்டதால், இதன் பின்பு பங்களாதேசுக்கு எதிரான ஆட்டத்தில் எப்படியாவது தொடரைக் கைப்பற்ற வேண்டுமென்ற கட்டாய நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இடைப்பட்ட டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 4 தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

சத்தாக்குரோமில் உள்ள ஜாஹூர் அஹமது சவுத்ரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தன்னுடைய அசுரத்தனமான பேட்டிங்கில் அசத்தி 188 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றனர்.

india moving to 2nd spot in WTC final

அன்றைய தின ஆட்டத்தில் புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது , பங்களாதேசின் தலைநகர் தாக்காவில் இருக்கும் ஸ்ரீ பங்களா நேசனல் மைதானத்தில் டிசம்பர் 22 தொடங்கி டிசம்பர் 25 வரை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்க்ஸில் பங்களாதேசினை விளையாட விடாமல், அஸ்வின் மற்றும் உமேஷ் கிட்டதட்ட 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இருந்தாலும் பங்களாதேசை சேர்ந்த மொமினுல் விடாமல் ஆடி 84 ரன்களைப் பெற்றிருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் முக்கியமான விக்கெட்களை எடுத்தனர் அக்சர், அஸ்வின் மற்றும் சிராஜ் கூட்டணி. விடாது வெற்றியைத் துரத்தி ஆடிய இந்திய அணி இன்று 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இப்படி போராடி பெற்ற வெற்றியானது இந்தியாவை டெஸ்ட் போட்டியின் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றியிருக்கிறது. முதலிடத்தில் 76.92 சதவீதத்தோடு ஆஸ்திரேலியாவும், மூன்றாம் இடத்தில் 54.55 சதவீதத்தோடு தென் ஆப்பிரிக்கா மற்றும் நான்காம் இடத்தில் 53.33 புள்ளி சதவீதத்தோடு இலங்கையும் உள்ளன.

இதனால் உலக டெஸ்ட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பை இந்தியா பெற்றுவிடும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

பிப்ரவரி 9 தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற உள்ள 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் இன்னும் புள்ளிகளில் உயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடும் போட்டியாளராக முடியும் என்கிறார்கள் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள்.

மேலும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லியிருப்பது இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும் என்பதை கணித்து கூறியுள்ளதாகவே தோன்றுகிறது.

பவித்ரா பாலசுப்பிரமணியன்

இஸ்லாமிய ஆசிரியைக்காக, வீல்சேரில் சபரிமலை செல்லும் மாற்றுத் திறனாளி!

தேனாண்டாள் பிலிம்ஸுக்கு உதவும் லைகா நிறுவனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *