ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
ஏறக்குறைய சூப்பர் 12சுற்றில் இடம்பெற்றுள்ள 12அணிகளும் தங்களது பாதி ஆட்டங்களை முடித்துள்ள நிலையில், அரையிறுதிக்கு தகுதிபெற மீதமுள்ள போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா – பங்காளதேஷ் அணிகள் இன்று சூப்பர் 12சுற்றில் மோதுகின்றன.
கடந்த 2007ம் ஆண்டு உலகக்கோப்பை லீக் போட்டி முதல் இந்தியா – பங்களாதேஷ் இடையிலான போட்டிகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (நவம்பர் 2) நடைபெற உள்ள போட்டி ஏறக்குறைய இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது.
நடப்பு டி20உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. ஆனால்,30ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஆட்டத்தில் தோல்வி கண்டது.
அதேபோல், முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய பங்களாதேஷ் அணி 2வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது. பின்னர் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
இதனால் இரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 4புள்ளிகளுடன் 2மற்றும் 3வது இடத்தில் உள்ளன.
எனினும் இந்திய அணியின் நெட் ரன்ரேட்டை +0.844)விட, வங்கதேச அணியின் நெட் ரன்ரேட் (-1.533)குறைவு. எனவே, அந்த அணி புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு கீழ் உள்ளது.
இந்நிலையில் அரையிறுதிக்கு முன்னேற வெற்றி அவசியம் என்பதால் இரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியானது, இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் 2 சுரங்க பாதைகள் தற்காலிக மூடல்!
கமலுக்கும், ரசிகருக்கும் இடையே நடந்த ‘அடையாள’ கலாட்டா!