அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 19) மதியம் 2 மணிக்கு தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பத்தில் இருந்தே ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார். ஒருபுறம் அவர் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என தனது அதிரடி பேட்டிங்கை தொடர்ந்து வருகிறார்.
மறுபுறத்தில் மெதுவாக விளையாடி வந்த சுப்மன் கில் 5வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் மிட் ஆனில் நின்ற ஆடம் சம்பாவிடம் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 4 இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்கை எதிர்கொண்டுள்ள கில் 3வது முறையாக அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார் விராட்கோலி.
இந்திய அணி 9வது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை குவித்து விளையாடி வருகிறது.
கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும் ரோகித் சர்மா 41 ரன்களுடனும், விராட் கோலி 23 ரன்களுடன் தொடர்ந்து தங்களது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீட்டில் குடும்பத்துடன் காணும் முதல்வர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டி… தடையில்லா மின்சாரம்: TANGEDCO!