ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்தியா

விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, அங்கு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முன்னதாக, ஆசியக் கோப்பையை கருத்தில்கொண்டு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கே.எல்.ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ், தீபக் சாஹர் போன்றோர் இடம் பெற்று அசத்திவருகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 18ம் தேதி, ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 20) ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெற்றார். முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே முன்கள வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலேயே பெவிலியன் திரும்பினர்.

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள்.

india easily clinched the odi series against zimbabw

முதல் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்த அந்த அணி, 21 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நடுவரிசை பேட்டர்களான சீன் வில்லியம்ஸ் (42 ரன்கள்) மற்றும் ரையன் பர்ல் (41 ரன்கள்) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணி 150 ரன்களுக்கு மேல் எடுக்க உதவினர்.

இறுதியில் அந்த அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில், ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க பேட்டர்களாக ஷிகர் தவானும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

கேப்டன் கே.எல்.ராகுல் 1 ரன்னில் நடையைக்கட்ட, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் ஷுப்மன் கில். பின்னர் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். ஷிகர் தவான் மற்றும் கில் தலா 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 6 ரன்களில் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

பின்னர் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், தீபக் ஹூடா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சஞ்சு சாம்சன் 43 ரன்களுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

இந்தியா Vs  ஜிம்பாப்வே இன்று ஒருநாள் போட்டி: தவானின் மகிழ்ச்சியும் வருத்தமும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *