4 ரன்ல அரை சதம் மிஸ்… ஒரு ஆள் இல்லைய்யா.. ஒரு டீம்!

விளையாட்டு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா   ஆல் அவுட் ஆகியுள்ளது . இந்திய அணியில் 11 பேட்ஸ்மேன்களில் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை. சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்கள் இதுவாகும்.

முதல் டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று  (அக்டோபர் 17) பெங்களுருவில் தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.  கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து ஆடத் தொடங்கினர். ரோகித் 2 ரன்களில் வெளியேறினார். கோலி மற்றும் சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல், ஜடேஜா , அஸ்வின் பூஜ்யம் ரன்களில் அவுட் ஆனார்கள்.

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்கள் எடுத்தார். மொத்தம் 21.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து மண்ணை கவ்வ வைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் 36 ரன்களும், 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்களும் எடுத்திருந்தது. சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா எடுத்துள்ள குறைந்தபட்ச ரன் இது. தொடர்ந்து, முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 158  ரன்களுக்கு  3 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 இந்த கேக் சாப்பிட்டால் கேன்சர் வருமா?அதிர வைக்கும் ரிபோர்ட்!

தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி பரிமாறிய ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *