ஆடவருக்கான ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் தனது பரம வைரியான பாகிஸ்தானை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தாண்டு ஓமனில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் குரூப் சுற்றுகள் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
ஓமனின் சலாலா விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஜூன் 1) இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப்போட்டியின் முதல் பாதியிலேயே அங்கத் பிர் சிங் (13′) மற்றும் ஆரைஜீத் சிங் ஹண்டால் (20′) ஆகியோரின் கோல்கள் இந்தியா வெற்றி பெற உதவின.
அதே நேரத்தில் கோல்கீப்பர் ஷஷிகுமார் மோஹித்தின் சிறந்த கோல் கீப்பிங்கும் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.
இந்த வெற்றியின் மூலம் ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி, அதிகபட்ச பட்டங்களை வென்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.
முன்னதாக இந்தியா 2004, 2008 மற்றும் 2015 ஆண்டுகளிலும், பாகிஸ்தான் 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளிலும் என தலா 3 மூன்று முறை கோப்பையை வென்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் மலேசியாவில் நடைபெறும் FIH ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பைக்கு இந்திய அணி நேரிடையாக தகுதி பெற்றுள்ளது.
மேலும் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது.
இதனை அங்கீகரித்து, ஹாக்கி இந்தியா நிர்வாக வாரியம் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் துணை ஊழியர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

பரபரப்பான இறுதிப் போட்டி குறித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய அணி கேப்டன் உத்தம் சிங் கூறுகையில்,
“பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்பதால் இது மிகவும் பதட்டமான இறுதிப் போட்டியாக அமைந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன்னால் அந்த அணி ஒருபோதும் விளையாடியதில்லை.
போட்டியின் ஆரம்பத்திலேயே 1-1 என டிரா ஆனதும், அவர்களை தோற்கடிக்க சிறப்பான வழிகளை கண்டறிந்தோம். 20வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது, அதன்பின்னர் ஆட்டத்தினை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒற்றை வரியில் மாமன்னன் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்த கமல்ஹாசன்
“இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்”: கமல்