இந்திய அணி வராவிட்டால் பாகிஸ்தானும் வராது: ரமீஸ் ராஜா அதிரடி

விளையாட்டு

“ஆசியக்கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் வந்தால்தான், நாங்களும் இந்தியா செல்வோம்” என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டி20 ஆசியக்கோப்பை சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 ஓவர் ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

இதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

”அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்? எங்களிடம் தெளிவான நிலைப்பாடு உள்ளது.

இந்திய அணி இங்கு வந்தால், உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் அணி அங்கு செல்லும். இந்திய அணி வராவிட்டால், பாகிஸ்தான் அணி இல்லாமல் அவ்வணி உலகக்கோப்பையில் விளையாடட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

50 ஓவர் ஆசியக்கோப்பைக்குப் பின், 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதையடுத்தே ரமீஸ் ராஜா, இப்படியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பின் இருதரப்பு தொடர்களிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவதில்லை. ஐசிசி தொடர்களிலும் பொதுவான இடங்களிலேயே மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

”ஆளுநரும் அண்ணாமலையும் மெண்டல்கள்”- மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி

கால்பந்து உலகக்கோப்பை: டிராவில் முடிந்த விறுவிறு போட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *