பாண்ட்யாவா? ரோகித்தா? : கேப்டன்சி பிரச்சினை!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் இரட்டைத்தலைமை என்பது தீராத பிரச்சினையாகக் காலம் காலமாக இருந்து வருகிறது.

அதில் தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் யார் அணியின் கேப்டனாகப் போகிறார்கள்? ஹர்திக் பாண்ட்யாவா? ரோகித் சர்மாவா? என்பது தான் டாப் சர்ச்சையானாலும், தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பர புரோமோவானது சர்ச்சைக்கு பலம் சேர்க்கும் விதமாக ”பாண்ட்யா” தான் கேப்டன் என்ற பேச்சை உருவாகியிருக்கிறது.

ஜனவரி 3 ல் தொடங்கி ஜனவரி 15 வரை நடைபெற இருக்கும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 தொடர்களில் இலங்கையோடு மோத இந்தியா தயாராகி வருகிறது . இன்னும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பங்கு பெறுவார்கள் என்பதற்கான அறிவிப்பு வரவில்லை.

ஆனால் யார் அணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு தொடர்ந்து வந்தது எல்லோரும் அறிந்ததே…. இந்நிலையில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹர்திக் பாண்ட்யாவை வைத்து விளம்பர புரோமோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.

அதில் ஹர்திக் பாண்டியா நடித்திருக்கிறார். ஆக, ஹர்திக் பாண்ட்யா தான் கேப்டன் போல என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனடியாக இந்த விளம்பரத்தையும் நீக்கியுள்ளார்கள்.

இப்படியான இரட்டைத்தலைமையை இந்திய அணிக்கு ஏற்படுத்துவது சரி வருமா? வராதா? என்ற குழப்பம் இந்திய அணியில் வருவது புதிது ஒன்றும் கிடையாது .

பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இயல்பாகவே டி20 , டெஸ்ட் மற்றும் ஒருநாள் போன்ற போட்டிகளுக்கு தனித்தனியாய் கேப்டன் இருப்பார்கள்.

ஆனால் இந்தியாவில் அதுபோன்ற நிலை இல்லை. ஒரே தலைமை தான் ஒட்டுமொத்த இந்திய அணியையும் வழிநடத்த வேண்டும்

ஆஸ்திரேலியா இங்கிலாந்தைப் போன்று தனித் தனி தலைமையை உருவாக்கினால் வேலைப் பளு குறையும். வெற்றி பெற முடியும் என்பது தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது.

india cricket team captainship

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விராட் வெர்ஸஸ் ரோகித் தலைமைப் பிரச்சினை தலைதூக்கிய போது கூட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இதனை மிக எளிமையாக எல்லோருக்கும் விளக்கி இந்த சர்ச்சையை எளிமையாக முடித்து வைத்தார்கள்.

அவர்கள் சொல்லிய காரணம் என்னவென்றால், அப்போது தான் விளையாட்டில் கவனம் செலுத்தி; t20 , டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கு ஏற்றார் போல் கவனம் செலுத்தி , தொடரை வெல்ல முடியும். இந்த முறையை ஏன் இந்தியா கையில் எடுக்கக் கூடாது? இதனால் நாம் அணியின் கேப்டனின் பளுவைக் குறைத்து எளிதாக வெல்ல முடியுமே என்று முன்னாள் வீரர்கள் முடிவெடுத்து இதனை இந்திய அணியில் உட்புகுத்தும் நடைமுறைக்கு இறங்கினர்.

ஆனால் எப்போதெல்லாம் டூயல் கேப்டன்சி பேச்சு வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு சர்ச்சை எழுந்து தான் ஓயும். அதன்படி தான் இப்போதும் கேப்டன் பாண்ட்யாவா? ரோகித்தா? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென்பதால் ,இந்த சர்ச்சையை விடுத்து இந்திய அணி தொடருக்கான ஆயத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றும் , இப்போது பெற்றிருக்கும் வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியைப் போலவே ஜனவரி 3 தொடங்கி 15 வரை இலங்கைக்கான டி20 மற்றும் ஒருநாள் தொடர், அதன் பின்னர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் .

அதை விட மிக முக்கியமானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி பிப்ரவரி 9 தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பங்கு அந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

பவித்ரா பாலசுப்ரமணியன்

“மராத்தி மொழி பேசும் இடங்களை யூனியன் பிரதேசமாக்கிடுக” – உத்தவ் தாக்கரே கோரிக்கை!

அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழப்பது கடவுள் செயலா? – நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *