உத்தரகாண்ட் பிராண்ட் அம்பாசிட்டராக ரிஷப் பந்த் நியமனம்!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக, முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் நியமிக்கப்பட்டார்.

உத்தரகாண்ட் மாநிலம் சதானில் நேற்று (ஆகஸ்ட் 11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதல்வர் தாமி ரிஷப் பந்த்-ஐ பிராண்ட் அம்பாசிட்டராக நியமித்து வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ரிஷப் பந்திற்கு முதல்வர் வாழ்த்து

”ரிஷப் தனது மன உறுதியுடன் இலக்கை அடைந்த விதம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கின்றது. ரிஷப் உலகில் ஒரு முத்திரையை பதித்ததோடு, நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ” என்றும் புகழாரம் சூட்டினார் புஷ்கர் சிங்.

மேலும் பேசிய அவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை உத்தரகாண்டின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்து கவுரவிப்பது விளையாட்டுத் துறையில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று கூறினார். மாநில இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் முத்திரையைப் பதிக்க சிறந்த சூழல் மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது. ரிஷப் போன்ற வீரர்கள் அனைவரையும் ஊக்கமளிப்பார்கள், விளையாட்டுக்கு நல்ல சூழலை உருவாக்குவார்கள் என்றும் அவர் கூறினார்”

போட்டிகள் மற்றும் ரன்கள்

ரிஷப் பந்த் குறுகிய காலத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். 31 டெஸ்ட் போட்டிகளில் 43.32 சராசரியுடன் 2,123 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 159 ஆகும், மேலும், டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் மற்றும் பத்து அரைசதங்கள் அடித்துள்ளார்.

27 ஒருநாள் போட்டிகளில், 36.52 சராசரியுடன் 840 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன்கள் 125 ஆகும். ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்துள்ளார்.

54 டி20 போட்டிகளில் விளையாடி சராசரியில் 883 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 65 மற்றும் இந்த போட்டிகளில் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார்.

தற்போது ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாகவும் உள்ளார்.

மோனிஷா

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.