INDvsPAK: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி!

Published On:

| By christopher

உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி தனது வரலாற்று பெருமையை தக்க வைத்துள்ளது இந்தியா.

குஜராத் அகமதாபாத்தில் இன்று(அக்டோபர் 14) நடைபெற்ற 2023 உலகக்கோப்பையின் 12வது லீக் போட்டியில் பரம வைரியான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

30வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 155 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அரைசதம் கண்ட கேப்டன் பாபர் அசாம் ஆட்டமிழந்ததும் அடுத்த 46 ரன்களில் 7 விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல் சரிந்து பரிதாபமாக ஆல் அவுட் ஆனது.

https://twitter.com/IshitaG10/status/1713146079808823698

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக சதம் கண்ட ரோகித் சர்மா, இந்த ஆட்டத்திலும் அதனை தொடர்ந்தார்.

63 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸருடன் 86 ரன்கள் குவித்த நிலையில், ஹாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்(53*) மற்றும் கே.எல் ராகுல்(19*) ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றி பெற வைத்தனர்.

Image

31வது ஓவரில் 49 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்ததுடன் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் செய்தார்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை பெற்றுள்ள இந்திய அணி, தற்போது 8வது முறையாக வெற்றி பெற்று அதனை தக்கவைத்துள்ளது.

மேலும் இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsPAK: ஆக்ரோசம் காட்டிய இந்தியா… ஆல் அவுட்டான பாகிஸ்தான்!

திரைப்பட விழாவில் ரிலீசாகும் ஜோதிகாவின் ‘காதல் – The Core’!

100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார் : தமிழில் பேசிய பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel