பலம் வாய்ந்த ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
நடப்பாண்டு மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் ஜப்பானின் கிஃபு மாகாணத்தில் உள்ள ககாமிகஹாராவில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.
குரூப் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, தென்கொரியா, சீனா ஜப்பான் உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
அதன்படி இந்தியா – ஜப்பான் இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஜப்பான் அணி, அதன் சொந்த மண்ணில் விளையாடியதால் கூடுதல் பலத்துடன் இந்திய அணியை எதிர்கொண்டது.
எனினும் ஆரம்பம் முதலே அவர்களை எளிதாக சமாளித்து விளையாடியது இந்திய மகளிர் அணி.
இதற்கிடையே இரண்டாவது பாதியில் தொடக்கத்திலேயே (47வது நிமிடம்) சுனேலிடா டோப்போ அட்டகாசமான கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார்.
அதற்கு பதிலடி கொடுக்க ஜப்பான் மகளிர் அணியினர் எவ்வளவோ முயன்றும் எதிர்கோல் போட கடைசி வரை முடியவில்லை.
இதனால் இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதன்மூலம் சிலியில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் சீனா- தென்கொரியா அணிகளில் ஒன்றுடன் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி மோதும்.
கிறிஸ்டோபர் ஜெமா
அமித் ஷாவை சந்திக்க அழைப்பு: சிவகார்த்திகேயன், விஷால் தவிர்ப்பு!
தேசிய விளையாட்டுகளில் பங்கேற்காத தமிழக மாணவர்கள்: உதயநிதி விளக்கம்!