வங்கதேச டெஸ்ட்: கடினமான இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!

விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற இந்திய அணி 513 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ்வணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். அதன்படி, டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ரிஷாப் பண்ட் 46 ரன்களும், ஸ்ரேயாஸ் 86 ரன்களும் எடுத்தனர்.

india bangladesh test cricket match results

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில், முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, இந்திய அணியின் வேக மற்றும் சுழல் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 102 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

கைவசம் 2 விக்கெட்கள் இருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை இன்று (டிசம்பர் 16) தொடர்ந்த வங்கதேச அணி, மேற்கொண்டு 48 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும் எடுத்தனர்.

எனினும், அந்த அணியை தொடர்ந்து பேட்டிங் செய்யவிடாமல் 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி.

அதன்படி மூன்றாவது நாளில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில், கேப்டன் ராகுல் 23 ரன்களில் ஏமாற்ற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

india bangladesh test cricket match results

அவருக்கு துணையாக நின்ற மற்றொரு ஆட்டக்காரரான புஜாராவும், இந்த இன்னிங்ஸில் விரைவாக ரன்களைச் சேர்த்ததுடன் சதமும் அடித்தார். அவர், 102 ரன்கள் எடுத்தார். புஜாரா, முதல் இன்னிங்ஸில் 90 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மூன்றாம் நாள் முடிவின்படி, வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்துள்ளது.

அவ்வணியின் ஷாண்டோ 25 ரன்களும், ஹாசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாளை நடைபெறும் நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி, வெற்றிக்காக போராடும். அவர்களது வெற்றியைப் பறிக்க இந்தியாவும் வியூகங்களை வகுக்கும்.

ஜெ.பிரகாஷ்

புதுப்பொலிவு பெறப்போகும் சென்னை சாலைகள்: 379 சாலைகளை சீரமைக்க முடிவு!

கையில் டேட்டா: பிடிஆரின் அடுத்த ஆபரேஷன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *